JobVibe.lk - Sri Lanka Job Portal

இரு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் நாற்பத்தொரு (41) நபர்களுடன் பதினொரு (11) சிறுபடகுகள் மற்றும் இரண்டு (02) இழுவைப் படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.


இதன்படி, திருகோணமலை செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, கோழிப்பண்ணை, கிளிப்பன்பேர்க் முனை, உப்புரால், நந்திக்கடல் களப்பு, அலம்பில், யானை தீவு, புடுவக்கட்டு, புத்தாளம் உச்சமுனை மற்றும் யாழ்ப்பாணத்தின் கோமர் முனைப் பகுதியின் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி, கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் நாற்பத்தொரு (41) நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டனர்.


மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முல்லைத்தீவு, கின்னியா, கோட்பே, ஈச்சலம்பட்டு, களவஞ்சிக்குடி, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்முடா சிறப்பு அதிரடிப் படையிடமும் ஒப்படைக்கப்பட்டன.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال