JobVibe.lk - Sri Lanka Job Portal

தெதுறு ஓயாவில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 08 ஆக உயர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


இதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 


வெள்ளிக்கிழமை (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 


தற்போது அந்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 


கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 


பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال