JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹோமொஸ் நீரிணையை திறப்பதற்கு இராணுவ ரீதியில் எது முக்கியத்துவம் வாய்ந்தது ? அமெரிக்க தரைப்படை தாக்குதல் சாத்தியப்படுமா ?

ஈரான் மீது அமெரிக்கா தரைப்படையை களமிறக்கும் நடவடிக்கை பற்றி பரவலாக பேசப்படுவதுடன், அதில் ஈரானின் எண்ணை ஏற்றுமதி மைய்யமாக உள்ள Kharg தீவினை கைப்பற்றலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. 


அவ்வாறு Kharg தீவினை கைப்பற்றினாலும், அதனை எவ்வளவு நாட்களுக்கு தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி சிந்திக்காவிட்டாலும், இராணுவ நிபுணர்கள் சிந்திப்பார்கள்.    


ஒரு பக்கத்தில் எதிர்பார்ப்புக்களையும், கவனத்தையும் திசை திருப்பிவிட்டு, வேறு திசைகளை நோக்கி படைகளை நகர்த்துவது இராணுவ தந்திரோபாயமாகும். இவ்வாறான தந்திரோபாயம் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படலாம். 


அந்தவகையில் Kharg தீவினைவிட, Qeshm தீவு, Larak தீவு மற்றும் ஷபார் துறைமுகம் என்பன இராணுவ ரீதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 

 

அமெரிக்காவுக்கு இன்றுள்ள முதன்மை இலக்கு ஹோமொஸ் நீரிணையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதாகும். அவ்வாறு செய்வதென்றால், Kharg தீவினை கைப்பற்றுவதில் பயனில்லை. Qeshm, Larak ஆகிய தீவுகள்தான் ஹோமொஸ் நீரிணையின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ளது. 


அத்துடன் ஹோமொஸ் நீரிணையை கட்டுப்படுத்தக் கூடிய ஈரானிய IRGC படையின் முக்கிய பிரிவும், கண்காணிப்பு மைய்யங்களும், தாக்குதல் படகுத் தளங்களும், நிலத்தடி ஏவுகணை நகரங்களும் குறித்த இரண்டு தீவுகளில் உள்ளதாக கூறப்படுகின்றது.   


எனவே Kharg தீவைவிட, இராணுவ ரீதியில் Qeshm, Larak ஆகிய தீவுகளும் வேறு பல இடங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் இந்த இரண்டு தீவுகளையும் கைப்பற்றுவதென்றால் அதிக உயிர்களை விலைகொடுக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு கைப்பற்றினாலும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாது. 


இங்கு பதிவிட்டுள்ள வரைபடத்தின் மூலம் இதனை அறிந்துகொள்ள முடியும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال