JobVibe.lk - Sri Lanka Job Portal

யுனைடெட் புட்சல் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய யுனைடெட் விளையாட்டு கழகம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சூப்பா சூப்ஸ் சுற்றுலா தகவல் மையத்தின் பணிப்பாளரும் கற்பிட்டி பிரதேச சபையின் மண்டலக்குடா வட்டார உறுப்பினருமான சுவிஸ் பைசல் ஏற்பாட்டில் கற்பிட்டி மண்டலக்குடா அல்மனார் விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் யுனைடெட் விளையாட்டு கழக அணியும் (UNITED SPORTS CLUB) பர்ஷிலோனா அணியும் (BARCELONA) மோதிக் கொண்டது.


விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் யுனைடெட் விளையாட்டு கழக அணி 04 -01 என்ற கோல் கணக்கில் பர்ஷிலோனா அணியை  வெற்றி கொண்டு  2026 ம் ஆண்டிற்கான யுனைடெட் புட்சல் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.


இறுதிப் போட்டியின் பரிளிப்பு நிகழ்வில பிரதம அதிதியாக கலந்து கொண்ட கற்பிட்டி பிரதேச சபையின் மண்டலக்குடா வட்டார உறுப்பினர் சுவிஸ் பைசல் கருத்து தெரிவிக்கையில்; இளைஞர்களை விளையாட்டில் ஆர்வமூட்டும் வகையிலேயே இவ்வாறான சுற்றுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தொடராக இவ்வாறான சுற்றுப் போட்டிகள் நடாத்துவதற்கு தாம் முயற்சி செய்வதாகவும் கற்பிட்டியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் பிரதேச சபை ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال