JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தில்லையடி பாடசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வடமேல் மாகாண ஆளுநரின் பணிப்புரையின் மூலம் கட்டட திருத்தங்களுக்காக ஒரு கோடி ரூபா நிதி தில்லையடி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன் தெரிவித்தார்.


பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான வேண்டுகோளின் விளைவாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இத்திட்டம் செயற்படுத்தப்படும். 


பாடசாலையின் பல்வேறு வளக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மாகாண மற்றும் மத்திய அரசின் மூலம் தாம் முன்னெடுத்து வருகிறோம். எதிர்காலங்களில் அவற்றுக்கான வள ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வோம் எனவும் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் தாஜுதீன் தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال