டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தளம் மாநகர சபை உறுப்பினர் முர்ஷித் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.
எம்.யூ.எம்.சனூன்
டித்வா சூறாவளி மற்றும் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம். முர்ஷித் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பயிலும், சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கே இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது புதன்கிழமை (04) காலை பாடசாலை அதிபர் பி.ஜெனற்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம்.முர்ஷித், கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரின் நன்கொடையின் மூலம் வழங்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
அங்கே மாணவர்கள் மத்தியிலே உரையாற்றிய புத்தளம் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.எம். முர்ஷித் தனது உரையில்,
வெள்ளம் காரணமாக கல்வி உபகரணங்களை இழந்திருந்த நிலையில், உங்களது கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி தொடர்வதற்காக இந்த உதவி திட்டம் வழங்கப்படுகிறது.
எந்த வித பேரிடர் காலங்களிலும் உங்களது கல்வி நிலை பாதிக்கப்படாமல் தொடர வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே இவைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பாடசாலையின் பகுதி தலைவர் ஆசிரியர் ஆர்.எஸ்.எம். ரொஷான், ஆசிரியை அருட்.சகோதரி கொன்ஸ்ரன்ரைன் மேரி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்த உதவி நடவடிக்கைகளானது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments