Breaking News

கட்டுப்பாட்டை இழந்துள்ள போர். எதுவரையில்?

சுப்ரீம் லீடர் உட்பட தலைவர்களும், தளபதிகளும் மொத்தமாக ஒன்றுகூடும்போது அவர்களை ஒட்டுமொத்தமாக கொலை செய்தால், ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டிருந்தது. 


ஜெனீவாவில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுக்கு முன்பு இந்த திட்டம் சாத்தியமாகியிருந்தால், அப்போதே தாக்குதல் நடந்திருக்கும். பேச்சுவார்த்தை என்பது உலகை ஏமாற்றும் நாடகம்.  


முஸ்லிம் நாடுகள் இராணுவரீதியில் பலமடைந்தால், அந்நாடுகளை சிதைப்பது போன்று தங்கள் மீதும் என்றோ ஒருநாள் அமெரிக்கா போர் தொடுக்கும் என்ற எதிர்பார்ப்பினால், நீண்டகாலமாக ஈரான் தன்னை தயார்படுத்தி வந்தது.  


அமெரிக்கா எதிர்பார்த்த சந்தர்ப்பம் சரியாக அமைந்ததனால், கடந்த சனிக்கிழமை காலை 200 க்கு மேற்பட்ட விமானங்கள் குண்டு மழை பொழிந்து சுப்ரீம் லீடர் உட்பட பெருமளவான தளபதிகளை கொலை செய்தது. 


திட்டம் வெற்றியடைந்தால், மறுநாள் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் அமெரிக்காவும், இஸ்ரேலும் கணிப்பிட்டது.  


ஆனால் சியோனிஸ்ட்டுக்களின் இந்த திட்டங்களுக்கு மாற்று திட்டங்களை ஈரான் ஏற்கனவே வகுத்திருந்தது. அதாவது தலைவர்கள் கொலை செய்யப்பட்டாலும் கட்டமைப்பு சிதறிவிடாமல் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இது பற்றி கடந்த நாட்களில் பல கட்டுரைகளை விரிவாக எழுதியிருந்தேன். 


சுப்ரீம் லீடரின் மரணத்துக்கு பின்பு எதிரிகளின் நிலைகள்மீது மிக ஆக்ரோசமான தாக்குதலினால் எதிரிகள் மட்டுமல்ல முழு உலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.   


அதாவது சுப்ரீம் லீடர் உயிரோடு இருந்திருந்தால், இவ்வாறு பரவலான தாக்குதலுக்கு அனுமதி வழங்கியிருப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. 


தற்போதய போரானது கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன், எதிரிகளை பழிவாங்கும் முழு வேகத்துடன் நடைபெறுகிறது. ஈரானிய ஜனாதிபதி நினைத்தாலும் போரை நிறுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 


வெளியில் வீரம் பேசுகின்ற ட்ரம்ப், பின்கதவு வழியாக பேச்சுக்கு விடுத்த அழைப்பினை ஈரான் நிராகரித்துள்ளது. இது நீண்ட போருக்கான சூழல் காணப்படுவதனை குறிக்கிறது.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments