JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தாருல் குர்ஆன் அல்கரீம் அரபுக்கல்லூரி நடாத்திய கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் தாருல் குர்ஆன் அல்கரீம் அரபுக்கல்லூரி நடாத்திய கிராஅத் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் 04 ம் திகதி சனிக்கிழமை மாலை 04 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


கல்லூரி முதல்வரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் எம்.இஸட்.எம்.சௌக்கி பஹ்ஜி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல அதிதிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


போட்டிகளில் பங்கேற்று முலிடம் பெற்றவருக்கு முதல் பரிசாக 50,000 ரூபாவும், இரண்டாம் பரிசாக  25,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளன.


மேலும் ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளதோடு போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال