JobVibe.lk - Sri Lanka Job Portal

பஹ்ரேனை ஈரான் கைப்பற்றுமா ? வளைகுடா நாடுகளில் பஹ்ரேனை குறி வைப்பது ஏன் ?

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் பதில் தாக்குதலில், பஹ்ரேன் முக்கியத்துவம் பெறுகின்றது. இதனால் மன்னர் நாட்டைவிட்டு சென்றுள்ளார் என்ற வதந்தியும் பரவுகின்றது. 


பஹ்ரேனையும், சவூதி அரேபியாவையும் இணைக்கின்ற கிங் பஹட் பாலத்தினை தகர்த்து தனிமைப்படுத்த முயற்சித்ததுடன், அங்கிருந்த அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் மற்றும் தலைநகர் மனாமாவில் அமெரிக்க உயர் அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடங்கள் அனைத்தும் தாக்கியழிக்கப்பட்டது.  


பஹ்ரேன் தீவு மிகவும் பழமையான வரலாறுகளைக் கொண்டது. மொசப்பத்தேமியா, சிந்து, எகிப்து ஆகிய நாகரீகங்களுக்கிடையில் மத்திய வர்த்தக நிலையமாக இருந்துள்ளது. 


வரலாற்று ரீதியில் பல நூற்றாண்டுகள் ஈரானின் ஒரு தீவாக இருந்துள்ளதுடன், அல்-கலீபா குடும்பம் இந்த தீவை கைப்பற்றியது. பின்பு 19 ம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது.


மன்னர் ரீசா பஹ்லவியின் ஆட்சியில் பஹ்ரேன், ஈரானின் 14 வது மாநிலம் என்று உரிமை கோரப்பட்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையானது அங்குள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தனி நாடாக அங்கீகரித்தது. 


1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு பஹ்ரேனை ஒருபோதும் ஈரான் உரிமை கோரியதில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் ஈரானை விரும்புகின்றனர்.    


2011 இல் ஏற்பட்ட அரபு வசந்தத்தில் மன்னர் ஆட்சிக்கு எதிராக பஹ்ரேனிய மக்கள் கிளர்ச்சி செய்தபோது சவூதி அரேபிய படைகளின் உதவியுடன் அப்போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. 


தற்போது பஹ்ரேனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் செல்கின்றபோது அங்குள்ள மக்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். 


பஹ்ரேனில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த தளமானது பாரசீக வளைகுடாவை மட்டுமல்லாது செங்கடல், அரபுக்கடல், இந்து சமுத்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதுடன், ஈரானை முழுமையாக் கண்காணிக்கின்றது. 


அமெரிக்காவின் இந்த கடற்படை தளமானது ஈரானுக்கு நீண்டகால பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. 


எனவேதான் ஈரானுக்கு எதிராக செயற்படுகின்ற மன்னரின் ஆட்சியை அகற்றி, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை ஏற்படுத்தி, அமெரிக்க கடற்படை தளத்தினை முற்றாக அகற்றுவதன் மூலம் ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தலை அகற்ற முயும் என்று ஈரான் செயற்படுகின்றது.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال