JobVibe.lk - Sri Lanka Job Portal

போருக்கு முன்பும் பின்பும். அரபு தலைவர்களின் சூழ்சிகளும், பொய் பிரச்சாரங்களும்.

போருக்கு முன்பு ஈரான் மீது எந்த நேரத்திலும் தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்ற பதட்ட நிலைக்கு மத்தியில், போர் தொடுத்தால், வளைகுடா நாடுகளில் இருக்கின்ற அனைத்து அமெரிக்க தளங்களையும் தாக்குவோம் என்று ஈரான் அடிக்கடி எச்சரித்து வந்தது. 


அதேநேரம் எங்களது நாட்டிலிருந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாதென்று பின் சல்மான் உட்பட அனைத்து வளைகுடா தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிக்கை ஒரு நாடகம் என்பதனை போருக்கு முன்பு எவரும் அறிந்திருக்கவில்லை.   


இந்த நிலையில் 28.02.2026 ம் திகதி அதிகாலையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சுப்ரீம் லீடரையும், இன்னும் பலரையும் கொலை செய்ததுடன், தெஹ்ரான் உட்பட பல இடங்களிலும் குண்டுமழை பொழிந்து பாடசாலை குழந்தைகளை கொலை செய்திருந்தும், எந்தவொரு அரபு தலைவர்களும் அனுதாபம் தெரிவிக்கவில்லை.  


ஆனால் அமெரிக்க தளங்கள் மீது பதில் தாக்குதலை நடத்தியதற்காக சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் பின் சல்மான் ஈரானை எச்சரித்திருந்தார். 


அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கூட்டிக்கொடுக்கின்ற பின் சல்மான் மற்றும் அரபு ஆட்சியாளர்களின் சூழ்ச்சி பற்றி ஆராயாமல், அரபு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை சில சமூக வலைத்தளங்கள் கண்டித்தன. 


அரபு நாடுகளில் உள்ள இராணுவ தளங்கள் மட்டுமல்லாது ஹோட்டல்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளையெல்லாம் ஈரான் தாக்கிய பின்புதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. 


அமெரிக்காவின் CIA, மொசாட் ஆகிய சதிகார ஒற்றர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு அரபு ஆட்சியாளர்கள் உல்லாச விடுதிகளை வழங்கியிருந்தனர்.  


ஈரானை தாக்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள், திட்டமிடல்கள், புலனாய்வு நடவடிக்கைகள் போன்ற அனைத்து தயாரிப்புக்களும் அரபு நாடுகளிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. 


அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வரைக்கும் இந்த உண்மையை உலகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஈரானிய புலனாய்வுத் துறையினர் துல்லியமாக அறிந்திருந்தனர்.     


எனவேதான் சர்வதேச அரசியலில் உள்ள சூழ்சிகளை புரிந்துகொள்ளாமல் அரபு தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்வது மாபெரும் தவறாகும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال