JobVibe.lk - Sri Lanka Job Portal

உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான உணவுப் பொதிகள் ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் வழங்கிவைப்பு..!

ஏறாவூர், கல்குடா உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கண்ணியமிக்க உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான ரமழான் மாத உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, “ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன்” ஏற்பாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் தலைமையில் நேற்று (28) ஓட்டமாவடி ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் வளாகங்களில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கிவைத்து அவர்களை கௌரவித்தார்.


மேலும், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், உலமாக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பெருமையையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பள்ளிவாசல் சேவையாளர்களின் அர்ப்பணிப்பையும் பணியாற்றும் ஒழுக்கத்தையும் பாராட்டும் ஒரு கண்ணியமிக்க நிகழ்வாக அமைந்தது.


-- ஊடகப்பிரிவு










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال