JobVibe.lk - Sri Lanka Job Portal

நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் 360 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் இலங்கை கடற்படை கடந்த வியாழக்கிழமை (26) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஒன்பது (09) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டமை.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال