JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆசிய கராத்தே வெற்றிக் கிண்ணம்; 18 பதக்கங்களை சுவீகரித்த இலங்கை அணி

ஆசிய கராத்தே வெற்றிக்கிண்ணம் - 2025 போட்டியானது இந்தியாவின் குஜராத் வதோதரா சமா உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்றது. 

  

ஆசிய கராத்தே வெற்றிக்கிண்ணத்துக்கான இப் போட்டியில் இந்தியா, நேபாளம், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றியிருந்தன.


இதன்போது இலங்கை சார்பாக, இலங்கை Wadokari  தலைவர் ஜயசிரி பெரேரா, புத்தளம் தலைமை பயிற்றுவிப்பாளரும் வடமேல் மாகாண Wadokari தலைவருமான எம்.பி.டி.பி. இலங்கரத்ன, தலைமை நடுவர் லஸந்த குமார, வீரர்களான மலிக் அபேரத்ன, தனிஜ சஸ்மித, மெனுஸ செவ்சித, பொசிரு ஜநோத்ய, தினிதி பிரமோதயா (பெண்), லக்விந்யா பெரேரா (பெண்),கௌசினி பெரேரா (பெண்), நிதுக அபிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 4 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளிப்பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களைச் சுவீகரித்து, தனது நாட்டுக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். 


இக் கராத்தேப் போட்டியில் இலங்கை சார்பாக பங்கு பற்றி பெருமை ஈட்டிக் கொடுத்த அனைத்து மாணவர்களும் புத்தளம் மாவட்ட கல்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال