JobVibe.lk - Sri Lanka Job Portal

துருக்கி நாட்டின் இலங்கைகான தூதுவர் Semih Lutfu Turgut, அவர்கள் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் இல்லத்திற்கு வருகை!

 செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம்

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் இல்லத்திற்கு, துருக்கி நாட்டின் மதிப்பிற்குரிய தூதுவர் (His Excellency   ,Semih Lutfu Turgut  the Turkish Ambassador) அவர்கள்  இன்று 6/1/2026 வெள்ளிக்கிழமை வருகை தந்தார்


மிகுந்த மரியாதையும் நட்பும் நிறைந்த சூழலில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இலங்கை–துருக்கி  நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பு, கல்வி, கலாசாரம் மற்றும் மனிதநேய உறவுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.


குறிப்பாக கல்வித் துறையில் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய இணைப்புகள், மாணவர் மேம்பாடு, சமூக வளர்ச்சி மற்றும் சர்வதேச அனுபவப் பகிர்வு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மாண்புமிகு துருக்கி தூதரின் இந்த மரியாதையான வருகை,  சமூக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.


இவ்வகையான சர்வதேச மட்ட சந்திப்புகள், எதிர்காலத்தில் வலுவான நல்லுறவுகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال