JobVibe.lk - Sri Lanka Job Portal

இந்தியாவின் அடிமைத்தனமும், சியோனிஸ்ட்கள் போன்று RSS சங்கிகளும்.

சில அரபு நாடுகள் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அடிமையாக இருப்பது போன்று உலகின் அதிக சனத்தொகையினைக் கொண்ட இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. 


அமெரிக்காவும், இஸ்ரேலும் வழங்கிய அழுத்தத்திற்கு அமைவாக ஈரானிடமிருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்வதனை இந்தியா நிறுத்தியுள்ளது. அத்துடன் ஈரானின் சபாஹர் (Chabahar Port) துறைமுக அபிவிருத்தியையும் இந்தியா நிறுத்தியுள்ளது. 


இஸ்ரேலிடமிருந்து பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இந்தியா கொள்வனவு செய்ய உள்ளதாகவும், விரைவில் இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் செல்ல உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றது. 


இன்றைய மோடி தலைமையிலான BJP அரசானது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அடிமையாக இருப்பது மட்டுமல்ல, RSS சங்கிகள் கீறுகின்ற கோட்டை தாண்டாமல் ஆட்சி செய்து வருகின்றது. 


இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததிலிருந்து முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் RSS சங்கிகளின் கெடுபிடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பிட்டுள்ளன.  


எனது முகநூலில் பதிவிடுகின்ற நியாயமான கருத்துக்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கும், இஸ்ரேலின் அடாவடிக்கும் எதிராக இருப்பதானது சில RSS சங்கிகளினால் ஜீரணிக்க முடிவதில்லை. இது அவர்களது பின்னூட்டங்களில் புரிகிறது.  


இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்வரைக்கும் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. இன்றைய ஆட்சியானது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாகும்.  


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال