JobVibe.lk - Sri Lanka Job Portal

வசந்தம் தொலைக்காட்சி, வானொலியின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சுயாதீன தொலைக்காட்சி ( ITN)  நிறுவனத்தின் தமிழ் ஒளி, ஒலிபரப்புச் சேவைகளான வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி ஆகியவற்றின்  செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான்  உத்தியோகபூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரிவின் பதில் முகாமையாளராகப் பணியாற்றி வந்த நிலையிலேயே வசந்தம் செய்திப் பிரிவின் பிரதி முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


வசந்தம் செய்திப் பிரிவில் நிறைவேற்றுத் தர தயாரிப்பாளராக சுமார் 17 வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ்.எம்.இர்பான் நியமனம் பெற்றார்.


செய்தித்துறையில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட இவர், வந்தம் தொலைக்காட்சியில் செய்திகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்தளித்துள்ளார். அந்த நிகழ்ச்சிகள் நேயர்களிடையே பெரும் வரவேற்புகளைப் பெற்றன.


வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலியில் ஒரே தடவையில் எம்.எஸ்.எம். இர்பான் தொகுத்து வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியும் அதனை அவர் வழங்கின்ற விதமும் பலரின் பாராட்டைப் பெற்றதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் செய்திகளுக்காக ஜனாதிபதி விருதுகளையும், தேசிய ரீதியில் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال