JobVibe.lk - Sri Lanka Job Portal

ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கு ஆதரவு வழங்குகிறதா ? இந்நாடுகளின் உண்மையான நிலைப்பாடு என்ன ?

அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள உலகின் முன்னணி வல்லரசு நாடுகள் தங்களுக்குள் நேரடி மோதலில் ஈட்டுபடாது. 


உலகின் முதன்மையான நாடு எது என்ற கேள்வி இருந்தபோது 1991 இல் சோவியத் யூனியனை பலகூறுகளாக பிரித்துவிட்டு அமெரிக்கா முதன்மை இடத்தை பிடித்தது.  


ரவுடி போன்று உலகை அடக்கி ஆழ்வதற்கு முற்படுகின்ற அமெரிக்காவை வீழ்த்திவிட்டு முதன்மை இடத்தை பிடிப்பதற்கு சீனாவும், ரஷ்யாவும் காத்துக்கொண்டிருக்கின்றது. 


அதேநேரம், சீனாவும், ரஷ்யாவும் தனது முதன்மை இடத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்துவருகிறது. 


இந்த இரு நாடுகளும் வெனிசுவேலா மூலமாக அமெரிக்காவின் விசப் பல்லை உடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. 


உக்ரேன் மூலமாக ரஷ்யாவை தோல்வியடைய செய்வதற்கு எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. அதுபோல் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பதட்டம் ஏற்பட்டபோது இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க முன்வந்ததன் மூலமாக சீனாவை கணக்குப்பார்ப்பதற்கு முயற்சித்தபோது, நிலைமையை புரிந்துகொண்ட இந்தியா விலகிக்கொண்டது. 


அதேநேரம், தைவானுக்கு உதவிகளை வாரிவழங்குவதன் மூலமாக சீனாவுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. 


சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளோடு அமெரிக்காவுக்கு என்னதான் வர்த்தக உறவுகள் இருந்தாலும், யார் முதன்மை என்ற ஆதிக்க போட்டியில் எந்தவொரு நாடும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. 


அமெரிக்கா – ஈரான் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை தோல்வியடைய செய்யும்பொருட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்காக சீனாவும், ரஷ்யாவும் ஈரானுக்கு உதுகிறது. 


அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் போர் ஒன்று நிச்சயம் ஏற்பட்டு அதில் அமெரிக்கா தோல்வியடைய வேண்டுமென்றுதான் சீனாவும், ரஷ்யாவும் உளப்பூர்வமாக விரும்புகின்றது. ஆனால் இவ்விரண்டு நாடுகளும் அமெரிக்காவுடன் நேரடி சண்டைகளில் ஈடுபடாது.


அதாவது உக்ரேனுக்கு அமெரிக்கா எவ்வாறு உதவுகிறதோ, அதேபோல் சீனாவும், ரஷ்யாவும் ஈரானுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال