JobVibe.lk - Sri Lanka Job Portal

தழுவையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 86,800 பீடிகள்,1,250 கிலோ பீடி இலைகளுடன் ஒருவரை கைது செய்த கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி தழுவ பகுதியில் இலங்கை கடற்படை  வியாழக்கிழமை (12) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​எண்பத்தாறாயிரத்து எண்ணூறு (86800) பீடிகள், ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1250) கி கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், நூற்று முப்பத்திரண்டு (132) பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் நூற்று மூன்று (103) கிலோகிராம் நிலக்கரி மற்றும் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று நான்கு (1594) ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் ஒரு சந்தேக நபரை (01) ஒரு லொரியுடன் கடற்படையினர் கைப்பற்றினர். 


அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியுடன் இணைக்கப்பட்ட தளுவ கடற்படைப் பிரிவினரால் தளுவ பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது, ​​சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி, பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட பீடி இலைகள், நிலக்கரி மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் ஆகியவை லொரியுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் மன்னாரில் வசிக்கும் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 


மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி, பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட பீடி இலைகள், நிலக்கரி, ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال