JobVibe.lk - Sri Lanka Job Portal

மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் 2026 ம் ஆண்டின் தரம் ஒன்றிற்கான கால்கோள் விழா மற்றும் அலுவலக கட்டடங்களின் திறப்பு விழாக்கள்.

எம்.யூ.எம்.சனூன் 

புதிய கல்விச் சீர்திருத்தத்துடன் தரம் 01 மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நிகழ்ச்சியானது சிலாபம் கல்வி வலயத்துக்குட்பட்ட மாதம்பை அல்-மிஸ்பாஹ்வின் அதிபர் எஸ்.எல். அன்வர் தலைமையில் இனிதே நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிலாபம் வலயக்கல்வி பணிப்பாளர் டபில்யூ.பி.எம்.ஈ.எச்.ஜயசிங்க, பாடசாலை அபிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாதம்பை பள்ளி நிர்வாகத் தலைவர், உலமாக்கள், இக்ரா குழுச் செயலாளர், உறுப்பினர்கள், மெஸ்டா குழுச் செயலாளர், உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனைய நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அல்-மிஸ்பாஹ் ஆசிரியர்கள் சிலரது பி.ஜி.டி.யி. செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதி அதிபர்களின் காரியாலய திறப்பு, பரீட்சைப் பிரிவு, உயர்தர வகுப்பின் பகுதித் தலைவர் அறை மற்றும் தரம் 01 மாணவர்களின் வகுப்பறைகளின் திறப்பு என பல நிகழ்வுகள் அதிபர் தலைமையில் வலயக் கல்விப் பணிப்பாளரால் இனிதே திறந்து வைக்கப்பட்டன.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال