JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணையின் கை மாத்தறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிவாரண உதவி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

மாத்தறை ஊடகவியலாளர்கள் சங்கம் கருணையின் கை நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் தென்னை மரத் தோப்புகளிலிருந்து பனை மரங்கள் வரை என்ற தலைப்பில் வழங்கப்பட்டு வரும் அனர்த்த நிவாரணத் திட்டத்தின் நான்காவது கட்டமாக புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணத்தில் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை  (23,24) வழங்கி வைத்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


மாத்தறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் யசந்த அரியசேனவின் கருத்துப்படி இந்த முயற்சி புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணத்தை உள்ளடக்கியது. சமீபத்திய டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏனைய  ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த பணியின் நோக்கமாகும்.


கருணையின் கை திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணத்தில் அனர்த்தம் காரணமாக இழப்புகளைச் சந்தித்த 20 ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.


இந்தத் திட்டத்திற்கு  மாத்தறையில் உள்ள ஹரிச்சந்திர மில்ஸ் பிஎல்சி மற்றும் தேவிநுவர உபுல்வன் ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயா ஆகியவை நிதியுதவி செய்திருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இந்தக் கட்டத்தின் வெற்றிக்கு  பல்வேறு மதத் தலைவர்களும் பொது நபர்களும் பங்களித்தனர், வெலிகம பிரதேச சபையின் பதில் தலைவர் தெனகம ராகுல தேரர், வென். யஹல்முல்லே சந்தனந்த தேரர், வென். திஸ்ஸமஹாராம இந்தானந்த தேரர், வென். மாவெல்லே சந்திம தேரர், மற்றும் வென். ஃபாதர் சார்லஸ் ஹேவாவசம் (மாத்தறை அன்னையின் தேசிய ஆலயத்தின் நிர்வாகி), முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமன்,  ஆயுர்வேத மருத்துவர் புத்திக செனவிரத்ன, தரிந்து யாப்பா அபேவர்தன, மற்றும் நிஹால் ரஞ்சித் (லங்கா ரோல்ஸ் தலைவர்) ஆகியோர் பங்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال