JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னாரில் 1211 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை (08) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து இருநூற்று பதினொரு (1211) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.


கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.


அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா 2025 நவம்பர் 08 ஆம் திகதி இரவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மன்னார் ஓலைதொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகொன்று சோதனை செய்யப்பட்டது. மேலும், அந்த டிங்கி படகில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று பதினொரு (1211) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் 01 டிங்கி படகானது  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டியின் துரையடி மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال