JobVibe.lk - Sri Lanka Job Portal

மிரிஸ்ஸ கடலில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படையின் உயிர்காக்கும் குழு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மாத்தறை, மிரிஸ்ஸ கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு (04) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை (28) கடலோரப் பகுதியில் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காப்பாளர்கள்  நான்கு பேர் நீரில் மூழ்குவதைக் கவனித்து, உடனடியாக அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.


மேலும், மீட்கப்பட்ட வெளிநாட்டினர் 13 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு ரஷ்ய பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال