வெண்ணப்புவயில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 700 லேகியம் பாக்கெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வெண்ணப்புவயில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 700 லேகியம் பாக்கெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (05) வெண்ணப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க குளியாபிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தான் வேலை செய்யும் இடத்தில் லேகியம் உருண்டை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் 700 லேகியம் பாக்கெட்டுகளுடன் சந்தேக நபர் வெண்ணப்புவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மாறவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளத்துடன், மேலதிக விசாரணைகளை வெண்ணப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments