Breaking News

மீலாதுன் நபி தினத்தில் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளின் தாய்மாருக்கு அத்தியாவசிய பொதிகள் வழங்கி வைப்பு

 (ரிஹ்மி ஹக்கீம்)

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் மீலாதுன் நபி தினத்தில் (05) பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 


இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிகள், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான அல்ஹாஜ் பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.








No comments