JobVibe.lk - Sri Lanka Job Portal

ஊடகவியலாளர்களால் கௌரவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட செயலாளர் ஹேரத்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக கடமையாற்றிய  எச் எம் எஸ் பீ ஹேரத் செப்டம்பர் மாதம் முதல் களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார் இவர் புத்தளம் மக்களுக்கு செய்த சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனீ தலைமையில் வெள்ளிக்கிழமை (29) புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அவருக்கான நினைவு சின்னத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال