JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி திகழி பகுதியில் பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட், மருந்து மாத்திரைகள், ஊசி என்பவற்றுடன் ஒருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து திங்கட்கிழமை (11 ) இரவு கற்பிட்டி திகழி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, முந்நூற்று எழுபத்தொன்பது (379) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், இரண்டு இலட்சத்து எண்பத்தோராயிரத்து இருநூறு (281200) மருந்து மாத்திரைகள் மற்றும் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்றொன்று (1291) மருந்து ஊசிகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு (01) சந்தேக நபருடன் பறிமுதல் செய்யப்பட்டன.


கற்பிட்டி திகழி பகுதியில், கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட்டனர். இந்த நடவடிக்கையின் போது, வீட்டிலிருந்து முந்நூற்று எழுபத்தொன்பது (379) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று எண்பத்தோராயிரத்து இருநூறு (281200) மருந்து மாத்திரைகள் மற்றும் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்றொன்று (1291) மருந்து ஊசிகளுடன் ஒரு சந்தேக நபர்  கைப்பற்றப்பட்டார்.


இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டியின் எத்தாளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


 கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து ஊசிகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال