JobVibe.lk - Sri Lanka Job Portal

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

2025 ஜூன் 23ஆம் திகதியில் வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறையானது Amana takafull life pls நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கைச்சாத்திட்டது. 


இது கல்வி மற்றும் தொழில். துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.


இந்நிகழ்வானது பாரம்பரிய மங்கள விளக்கேற்றுவதன் மூலம் ஆரம்பமாகியது. இதில் முக்கிய அதிதிகளான சிரேஷ்ட பேராசிரியர் அ. அற்புதராசா (துணைவேந்தர்), பேராசிரியர் யோ. நந்தகோபன் (பீடாதிபதி),

திரு. கீஹான் ராஜபக்ஷ (CEO), திரு புவிராஜ் (உதவி பொது முகாமையாளர்), திரு. எஸ்.ஏ. ஜூட் லியோன் (சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறைத் தலைவர்), மற்றும் திரு. எஸ். சிவநேந்திரா (.சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்) உட்பட இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் துறை தலைவர், பீடாதிபதி, துணைவேந்தர் மற்றும் CEO / Amana taka full life plc ஆகியோர் உரையாற்றினர். 


திருமதி கே.பி.டபிள்யூ. தில்ஹானி, ஆர். வீரசிங்க ஆகியோரால் ஒப்பந்தத்தின் மேலோட்ட விளக்கம் வழங்கப்பட்டது. 


பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கைச்சாத்திடப்பட்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிர்வாகிகளான பதிவாளர், நிதியாளர்,  உதவிப் பதிவாளர், துறை தலைவர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் ஆகியோர் ஈடுபாடுடன் பங்கேற்றனர். 


இது இந்நிறுவன ஒத்துழைப்பிற்கான பல்கலைக்கழகத்தின் வலுவான ஆதரவை பிரதி பலிக்கிறது.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கூட்டு ஆய்வு மாணவர்களின் திறன் மேம்பாடு பயோடோ அறிவீனை பரிமாற்றம், மற்றும் தொழில்துறை தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பரஸ்பர வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க துணை செய்யும்.

















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال