(உடப்பு மகாதேவன்)
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த சில தினங்களாக உகந்தமலையிலிருந்து பாத யாத்திரையை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து மக்கள் ஆரம்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாத யாத்திரையை நிறைவு செய்த வண்ணம் கதிர்காம வள்ளி மலைக்குச் சென்ற வேளை இந்த பக்தர் மரணமடைந்துள்ளார்
இவர் கடந்த காலத்தில் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் மேலும் குறிப்பிட்டனர். இவரின் பிரேதம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
