JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற ஹஜ் விழா

புத்தளம், புளிச்சாக்குளத்தின் புதுக்குடியிருப்பு கிராமத்தில் சுமார் 30 வருடங்களின் பின்னர் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் விழா முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் (மர்கஸ்) உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தின் சுமார் 30 வருடத்திற்கு பின்னர் புதுக்குடியிருப்பு வாலிபர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு அஸ்ஸபா பெளன்டேஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஹஜ் விழா மற்றும் கலை நிகழ்சிகள் சென்ற ஜுன் மாதம் 10ம் திகதி நடைபெற்றது.


இந்நிகழ்வில் காலை 9.00 மணி முதல் மரதன் ஓட்டம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00  மணி வரை பல தரப்பட்ட விளையாட்டுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கு வேறாகவும் நடைபெற்றதோடு மேடை நிகழ்ச்சிகள் இரவு 11.30. மணி வரை நடைபெற்றது இம்மேடை நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள சகோதரர் அல்ஹாஜ்  ஹில்மி முர்ஷித் மற்றும் சகோதரர் சுபா ஊர் மக்களால் கெளரவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடகங்கள், பாலர் பாடசாலை மேடை நிகழ்ச்சிகள் எனவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருதமுனை கமால் அவர்களின் இஸ்லாமிய பாடல்கள் இடம் பெற்றது.


அத்தோடு மக்களை கவரும் வகையில் வானவேடிக்கை மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது 


இந்நிகழ்வை மிகவும் வெற்றிகரமான நடாத்தி முடிப்பதற்கு பூரண ஒத்துழைப்புக்களை புதுக்குடியிருப்பு வாலிபர்கள் மற்றும் அஸ்ஸபா பெளன்டேஷன் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகம் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

 

எனவே இந்நிகழ்வில் கலந்து பங்கேற்ற பாலர் பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் மற்றும் உதவிகள் செய்த நல்லுல்லங்கள அனைவருக்கும் புதுக்குடியிருப்பு வாலிபர்கள் மற்றும் அஸ்ஸபா பெளன்டேஷன் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


(புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு 

என். எம்.ஹபீல் கபூரி, Jp)











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال