JobVibe.lk - Sri Lanka Job Portal

அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் பவாஸ் ராசிக்கினால் உடுகொடை பள்ளிவாசலுக்கு பல்லூடகம் (மல்டிமீடியா ப்ரொஜெக்டர்) வழங்கி வைப்பு!.

 (ரிஹ்மி ஹக்கீம்)

ஐக்கிய மக்கள் சக்தியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் பவாஸ் ராசிக்கினால் நேற்றைய தினம் (13) உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ரூ.210,000 பெறுமதியான (மல்டி மீடியா ப்ரஜெக்டர்) பல்லூடகம் ஒன்று கையளிக்கப்பட்டது.


இதன்போது பள்ளிவாசல் பிரதம கதீப் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


அண்மையில் இடம்பெற்ற அத்தனகல்ல பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வட்டார வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற வேட்பாளர்களில் ஒருவரான நவாஸ் ராசிக் நீண்டகாலமாக பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال