JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் உதைபந்தாட்ட லீக் நிர்வாகிகளுக்கும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது யமீன், செயலாளர் அப்துல்லா முறாத் மற்றும் பொருளாளர் முஹம்மது ரஸ்லான் ஆகியோர் புதன்கிழமை (11) இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவரான ஜஸ்வர் அவர்களை சந்தித்து புத்தளத்தின் உதைபந்தாட்ட அபிவிருத்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தினர். 


எதிர்வரும் காலங்களில் பல்வேறு உதைப்பந்தாட்ட தொடர்கள் மற்றும் நிதி அனுசரணைகளை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஊடாக புத்தளம் உதைபந்தாட்ட லீக்கிற்கு வழங்குவதாக அதன் தலைவரான ஜஸ்வர் இதன் போது புத்தளம் லீக்கின் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.


மேலும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கிற்கு முதல் கட்டமாக 05 பந்துகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் முன்னாள்  செயலாளரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன முன்னாள் பொருளாளருமான ஜே.எம். ஜௌஸி அவர்களின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال