JobVibe.lk - Sri Lanka Job Portal

49வது தேசிய விளையாட்டுப் போட்டியில் புத்தளம் பிரதேச செயலக காற்பந்தாட்ட அணி புத்தளம் மாவட்ட சாம்பியனாக தகுதி.

எம்.யூ.எம். சனூன்

49வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.


இந்த போட்டி தொடர் அண்மையில் புத்தளம் மாவட்டம் மாராவில சென் செபஸ்தியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


இந்த போட்டி தொடரில் புத்தளம், சிலாபம், வென்னப்புவ, நாத்நாண்டிய, தங்கொட்டுவ, கல்பிட்டி ஆகிய 06 பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.


இறுதிப்போட்டியில் புத்தளம் பிரதேச செயலக அணியும், வென்னப்புவ பிரதேச செயலக அணியும் எதிர்கொண்டதில் 03 கோல்களினால் புத்தளம் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று புத்தளம் மாவட்ட சம்பியனாக தகுதி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் புத்தளம் பிரதேச செயலக அணியானது அடுத்து வரும் அகில இலங்கை ரீதியிலான மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளது.


புத்தளம் பிரதேச செயலக அணியினை புத்தளம் விளையாட்டு அதிகாரி சுமித் வழி நடாத்தி இருந்தார். புத்தளம் நகர சிரேஷ்ட காற்பந்தாட்ட வீரர்களும் இதற்கு உதவியாக செயற்பட்டனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال