JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம், அல் காஸிமி சிட்டியைச் சேர்ந்த அல் ஹாபிழ், மெளலவி முத்தலிப் முகம்மது சிபான் (காசிமி) LL. B (Hons) உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

புத்தளம், அல் காஸிமி சிட்டியை சேர்ந்த முத்தலிப் மற்றும் பாத்திமா றம்சியா  தம்பதியின் செல்வ மகனான  அல் ஹாபிழ், மெளலவி முத்தலிப் முகம்மது சிபான்  (காசிமி) LL. B (Hons)  அவர்கள் 16.05.2025 ஆகிய இன்று உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  


இவர் உலுக்ககாப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  (நவோதயா பாடசாலை) ஆரம்ப கல்வி தொடக்கம் தரம் ஏழு (7) வரை கல்வி கற்றதுடன் ஏக காலத்தில் உலுக்காப்பள்ளம், இல்மியா புரத்தில் அமைந்துள்ள இல்மியா அரபுக் கல்லூரியில் புனித குர்ஆனை மனனமிட்டு அல்ஹாபிழ் பட்டத்தையும் பெற்றார். 


பின்னர் 2010 ம் ஆண்டு இலங்கையின் தாய் மத்ரசாக்களிள் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா மத்ரசாவில் மார்க்கக் கல்வியை தொடர்ந்து மத்ரசாவின் முழுதான அனுசரணையுடன் கா. பொ. த  சதாரண பரீட்சையில் 6A,B,2C எனும் காஸிமிய்யா மத்ரசாவின் வரலாற்று சிறப்பு பெறுபேறு பெற்றதுடன் கா. பொ.த உயர்தரத்தில் கலைப் பிரிவில்  தனியார் பரீட்சாத்தியாக தோற்றி 3A எனும் வரலாற்று சிறப்பு பெறுபேறு பெற்றதுடன் காஸிமிய்யா மத்ரசாவின் 131 வருடகாலத்தின் முதல் சட்டத்தரணி ஆகும் வாய்ப்பை பெற்றதுடன் 2017ம் ஆண்டு மெளலவி கற்கையையும் பூர்த்தி செய்தார். 


பின்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின், சட்ட பீடத்தில் அவரது சட்ட இளமானி படிப்பினை நிறைவு செய்து சட்ட இளமானி பட்டத்தையும் (LL.B Hon’s) பெற்றுக் கொண்டார். 


மேலும் இவர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 

1. அல் ஆலிம் (முதவஸ்சிதா) 

2. அல் ஆலிம் (சானவிய்யா) 

3. அஹதியா 

4. தீனிய்யாத்‌ 

போன்ற கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார். 


அதுமட்மின்றி தேசிய மட்டத்திலும் சமூக மட்டத்திலும் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வருவதோடு மேல்நிலை, கீழ்நிலை பதவிகளையும் வகித்து வருகின்றார். 


ஆன்மீக மற்றும் லெளகீக துறைகளில் சிறப்பு தேர்ச்சிபெறும் அல் ஹாபிழ், மெளலவி முத்தலிப் முகம்மது சிபான்  (காசிமி) LL. B (Hons) சமூகத்திற்கு சிறப்பான சேவையாற்றி எமது சமூகத்திற்கும் ஊருக்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال