JobVibe.lk - Sri Lanka Job Portal

காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்; ஹக்கீம், நிசாம் காரியப்பருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராட்டு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற வைப்பதற்காக தமிழ் தரப்புடன் இணைந்து பாரிய பங்களிப்பு செய்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோருக்கு விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்ற விவாதங்களிலும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர்கள் ஆணித்தரமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துகளை முன்வைத்து, அழுத்தம் வழங்கியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோர் குறித்த வர்த்தமானியை இரத்துச் செய்யும் விவகாரத்தில் வழங்கிய பங்களிப்பை பாராட்டி விஷேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال