JobVibe.lk - Sri Lanka Job Portal

நிக்கவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் விபத்து

  (உடப்பு - க.மகாதேவன்)

நிக்கவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியிலுள்ள பொலிஸ்வீதித் தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் (8) இரவு இடம்பெற்றுள்ளது.


பிங்கிரி பகுதியிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதித் தடுப்பில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், மற்றும் ஒரு நபர் காயமடைந்த நிலையில் நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ,பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய (37) வயதுடைய கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக வேன் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணைகளில், சாரதி மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال