JobVibe.lk - Sri Lanka Job Portal

சிறப்பாக இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இப்தார் நிகழ்வு

(றபாயிஸ் முஹம்மட் றிவி)

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகப் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித்தின்  நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நேற்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எம்.எஸ்.எம். ஸாகிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசல் தலைவர் ஓய்வுபெற்ற பொறியியிலாளர் யூ.எல்.எம். அஜிஸ் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் செய்தி முகாமையாளர் ஏ.எச்.எம்.ஹாரீஸ், பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.எச்.அஸ்ரி, உறுப்பினர் ஏ.கே.ஹஸான் அஹம்மட், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், பிராந்திய செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எப். எம் றஹ்மத்துல்லாஹ் மௌலவி  விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார்.


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர் எம்.எச்.எம்.சிப்ஹான் இப்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன், நன்றியுரையினை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உதவி முகாமையாளர் மஹ்ரூப்.எம்.ஜபீர் நிகழ்த்தினார்.


இதன் போது கலந்து கொண்ட பிரதம அதிதி, கெளரவ அதிதி மற்றும் விசேட அதிதி ஆகியோர்களுக்கு ஸ்கை தமிழ் குடும்பத்தினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال