JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (28) காலை 09 மணிக்கு பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம் முஸ்னி தலைமையில் இடம்பெற உள்ளது.


மேற்படி பாடசாலையின் பிரதான நுழைவாயில் முன்னாள் அதிபர் எஸ்.எம் ஹனீபாவின் வேண்டுகோளுக்கு இனங்க தற்போதைய அதிபர் பீ.எம். முஸ்னியின் வழிகாட்டலில் மர்ஹூம் எஸ் கதிர்மரிக்காரின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினரால் நிர்மானிக்கப்பட்டு அவரது புதல்வரான முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் கே.எம்.எம் பைசல் மரிக்காரினால் திறந்து வைக்கப்படவுள்ளது.


இத்திறப்பு விழாவிற்கு பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ மாணவிகள் சங்க உறுப்பினர்கள் என சகலரினதும் பங்களிப்புடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال