JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.!

(அஸ்லம் எஸ். மௌலானா)

கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன் தனது கடமைகளை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கடமையாற்றி வந்த வை. ஹபீபுல்லாஹ் அவர்கள் சமுர்த்தி திணைக்களத்தின் பிரதம கணக்காளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றதையடுத்தே, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற பி. பிரியதர்ஷன் அப்பதவிக்கு மேலதிகமாக மாநகர சபையின் கணக்காளராக பதில் கடமையாற்றும் பொருட்டு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.பாஸித் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال