JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் உழைத்து முன்னேறாத ஒருவர் வேறு எங்கும் முன்னேற மாட்டார்..!கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் முஸம்மில்

கற்பிட்டி பிரதேசத்தின் சிறப்பு பற்றியும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு மற்றும் கஷ்டங்கள் வறுமை நிலை பற்றி தானும் தனது குடும்பமும் அனுபவித்த நிலை அந்த நிலையிலும் தம்மை கல்வியில் வெற்றியடை செய்து தனது குடும்பத்தில் மூன்று பட்டதாரிகளை உருவாக்கிய   தனது பெற்றோர்களை நினைவு கூர்ந்ததுடன் கற்பிட்டியில் உழைத்து முன்னேறாத ஒருவர் வேறு எந்த பிரதேசத்திலும் முன்னேற மாட்டார் என்பதனை நான் இந்த இடத்தில் உறுதியாக தெரிவிப்பதாக மஹ்தி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தனது உரையில் தெரிவித்தார். 


கற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் மஹ்தி பவுண்டேஷன் கல்வி சார் வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ.ஆர்.எம் பங்களாவில் வியாழக்கிழமை (09):மஹ்தி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் அதிபரும் மஹ்தி பவுண்டேஷனின் ஆலோசகருமான  எஸ்.எம் அருஸ் மற்றும் கற்பிட்டி ஐயூப் பாடசாலையின் ஆசிரியரும் மஹ்தி பவுண்டேஷனின் இணைப்புச் செயலாளருமான எம் நவாஸ், கற்பிட்டியின் உலமா எம்.டி றிப்கான் (றஹ்மானி), மற்றும் கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர் றஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷன் கல்வி சார் வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் இரண்டாவது நிகழ்வில் கற்பிட்டி புதுக்குடியிருப்பு மற்றும் ஹூதா நகர் பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 80 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் மஹ்தி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال