JobVibe.lk - Sri Lanka Job Portal

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி உடப்பில் தைத்திருநாள் விஷேட பூஜை

 (க.மகாதேவன்)

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (14) புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் ,வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


வரலாற்று சிறப்புமிக்க உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.


காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.


ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ குமார பஞ்சாட்சர குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.


நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைப் பெற வேண்டியும் பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.


இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.


இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال