JobVibe.lk - Sri Lanka Job Portal

நற்பிட்டிமுனையில் மாபெரும் இரத்தான முகாம்

பாறுக் ஷிஹான்

'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' என்ற  தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் கடந்த  ஞாயிற்றுக் கிழமை(12)  நற்பிட்டிமுனை கமு/கமு/அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.


நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் வீ.ரீ.கனூன்   தலைமையில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.


இம் மாபெரும் இரத்ததான முகாமில் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال