JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் உடப்பில் இரவு நேரப் பாசறை

 (க.மகாதேவன்)

உடப்பு 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி பாலர் பாடசாலையின் “இரவு  நேரப் பாசறை” அதன் ஆசிரியை திருமதி: கிருஷ்ணதேவி கணேசன் தலைமையில் (29) இடம்பெற்றது.


இதன் போது மாணவர்களின் குழு நடனம், மற்றும் ஆசிரியைகளின் பாடல்கள் இடம்பெற்றதோடு,ஐந்தாம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்குதல் அத்துடன் ஆசிரியை திருமதி: கிருஷ்ணதேவி கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்குதலும் இடம்பெற்றது.


இதில் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.சின்னராசா  கலந்து கொண்டதோடு, அதிபர்கள்,ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال