JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - உடப்பு ஆலயத்தில் கொடியேற்றம்

 (உடப்பு-க..மகாதேவன்)

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திரௌபதியம்மன் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (2) காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.


ஆலய நிர்வாக சபை  பொருளாளர் திரு.ம.ரூபன் அவர்கள் கொடிச்சீலையை தலையில் சுமந்த வண்ணம் உள் வீதியை  சுற்றி வந்த பின்னர் ,ஆலயக் குருக்கள் சிவஶ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


இதன் போது தேவ பாராயணம் பாடப்பட்டு கொடியேற்றம் இடம்பெற்றது.அதன் பின்னர் கொடித் தம்பத்திற்கு பால் அபிஷேகம் போன்றன இடம்பெற்றன. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال