JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தின் அடையாளங்களில் ஒன்றாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார்

இல்ஹாம் மரைக்கார்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வுலகைவிட்டும் பிரிந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் தொடர்பில் எமது புத்தளம் சமூகம் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன் எமது தேசத்தில் வாழும் மக்களும் இவர்களது பணிகள் தொடர்பில் தெரிந்து கொள்வது முக்கியமாக கருதி இந்த கட்டுரையினை எழுதுகின்றேன்.


1954 ஆம் ஆண்டு புத்தளத்தில் பிறந்த அப்துல்லா  மஹ்மூத் ஆலிம் அவர்கள் புத்தளத்தில் பல்துறையாளர்களின் வரிசையில் முதன்மையானவராக குறிப்பிடுவது மிகவும் பொறுத்தமாகும்.


புத்தளத்தின் சகல நிகழ்வுகளிலும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் பிரசன்னத்தை காணலாம்.அந்த அளவுக்கு புத்தளம் சமூகத்தின் மத்தியில் நன்மை மதிப்பினையும்,நம்பிக்கையினையும் கொண்ட ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டு இருந்தமையே பிரதானமானதாகும்.


சில நாட்கள் சுகயீனமுற்ற நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 70 வது வயதில் அன்னாரது உயிர் பிரிந்தது.(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் வாழ் நாள் முழுவதுமாக ஆன்மீகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தமையானது ,  சமூக ரீதியான பிரச்சினைகளின் போது நீதியான தீர்ப்பினை கூறும் ஒருவராக அவரின் செயற்பாடு காணப்பட்டதால் புத்தளம் மட்டுமல்லாமல் அதனை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களை நாடி வந்த சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்துள்ளதை புத்தளத்தை சார்ந்த ஒருவன் என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொறுத்தமாகும்.


குறிப்பாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் தந்தையினால் உருவாக்கப்பட்ட புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுரியானது இலங்கையின் அரபுக் கல்லுரிகளின் வரலாற்றில் முதன்மையானதாகும்.அரபுக் கல்லுரி என்பதற்கு அப்பால் பொது அறிவுடன் கூடிய கல்விக் கூடமாக காசிமிய்யாவை உருவாக்குவதில் அப்துல்லா ஆலிம் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும்.


இது மட்டுமல்லாமல் கல்விமான்களை அனுகி காசிமிய்யாவின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் அவ்வப்போது பெற்றுக் கொள்ளும் அவரது முயற்சி காசிமிய்யாவின் மீது அளப்பற்ற பற்று கொண்டவராக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் செயற்பட்டுவந்தமையானது  இக்கல்லுரி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அருளாக குறிப்பிடலாம்.


சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது சர்வமத அமைப்பில் இருந்து அதனை பற்றி எரியவிடாமல் அனையச் செய்து, மிகவும் பக்குவத்துடன் கையாளுகின்ற ஆளுமையினை இறைவன் அவருக்கு கொடுத்ததினால் புத்தளம் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டதை எதிர்கால சமூகம் தெரிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.


அதே போல் விளையாட்டு ,கல்வி,பாடசாலைகளின் அபிவிருத்திகள்,மற்றும் பொது விடயங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை சந்திப்பதிலும்,அபிவிருத்திகளை  புத்தளம் நன்மை கருதி பெறுவதில் அவ்விடத்திற்கு பிரசன்னமாகி தமது அமைதியான பேச்சாற்றலினால் அதனை அடைந்து கொள்ளும் பக்குவத்தை கொண்டவராக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார்.


இந்த நிலையில்  புத்தளம் சமூகத்திற்கான அவரது  அளப்பறிய பணிகளானது  எழுதப்படும் எதிர்கால புத்தளம் வரலாற்றுப் பதிவில் அழிக்க முடியாததொன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவரது கடந்த கால சமூகப் பணிகள் மாணவர்கள் மத்தியில் நினைவு கூறப்படவேண்டியது என்பதையும் பதவிட விரும்புகின்றேன்.


புத்தளம் சமூகத்திற்கு மர்ஹூம் அப்துல்லா ஆலிம் அவர்கள் ஆற்றிய பணி என்றும் போற்றப்பட வேண்டியதொன்று என்பதுடன்,அன்னாரது மறுமை வாழ்வுக்காக நாம் பிரார்த்தனை செய்வதானது இன்றியமையாததொன்று என்பதையும் பதிவிட்டு அன்னாரது பிரிவால் துன்புற்று இருக்கும் குடும்பத்தினர்களுக்கு இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாக எமது பிரார்த்தனையினையும் செய்வோம்.


இல்ஹாம் மரைக்கார்            சமூக செயற்பாட்டாளர் முகாமைத்துவ பணிப்பாளர் அமேசன் கெம்பஸ் மற்றும் அமேசன் கல்லுரி







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال