(க.மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை (8) ஏழாம் நாள் திருவிழாவில் சப்பற உற்சவ பவனிஇடம்பெற்றது.
இதன் போது சுவாமி உள் வீதி, வெளிவீதி வருதல் இடம்பெற்றது. பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பார்த்தசாரதிப் பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







