JobVibe.lk - Sri Lanka Job Portal

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (காசிமி,மதனி) தனது அதிபர் பதவி சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். 


அன்னாரின் 34 வருட தொடர் சேவையை பாராட்டி கல்லூரி பழைய மாணவர்  அமைப்பாகிய "சில்சிலதுல் காசிமிய்யீ" அமைப்பு அதன் வருடாந்த அங்கத்தவர் பொதுக் கூட்டத்தின்போது அவருக்கு விருது  வழங்கி கௌரவித்தது.


அத்துடன் துருக்கி உலுடக் பல்கலை கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் "காசிமி' அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் அவர்களும் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


கல்லூரியின் மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பழைய மாணவர்கள், மாணவர்கள் , உஸ்தாத்மார்கள், தர்மகர்தா சபையினர், முகாமைத்துவக் குழுவினர் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال