JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - உடப்பில் இருமுடி கட்டுதல் நிகழ்வு!.

 (உடப்பு-க.மகாதேவன்)

இந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் சுவாமி ஆலயத்தை தரிசிப்பதற்காக உடப்புலிருந்து 35க்கும் மேற்பட்ட மாலை அணிந்த ஐயப்ப பக்த சாமிமார்களின் இருமுடி கட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (30) காலை இடம்பெற்றது.


மாலை அணிந்த சாமிமார்களின் சின்னக்கொலனி பகுதி வீட்டிலிருந்து கன்னிச் சாமிகள் இருவருக்கு இந்த இருமுடி கட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வை குருசாமி கா.பார்த்தசாரதி மூர்த்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். சரணம் பாடியவாறு பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال