JobVibe.lk - Sri Lanka Job Portal

இணைப்பாடவிதான துறையில் நுரைச்சோலை தேசிய பாடசாலை மற்றுமொரு வரலாற்று சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

இணைப்பாடவிதான துறையில் நுரைச்சோலை தேசிய பாடசாலை மற்றுமொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.


குருணாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் (03) நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தின போட்டிகளில் “தமிழறிவு வினாவிடை” போட்டியில் நுரைச்சோலை தேசிய பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்று முதல் தடவையாக தமிழ் மொழித்தின நிகழ்ச்சிகளில் அகில இலங்கை மட்டத்திற்கு  தெரிவாகியுள்ளது. 


எம்.ஆர். றிஸ்னத் பானு, எப்.எப். இல்மா, ஜே.எப். ஜெஸ்னா, எஸ்.எச். அன்ஹா மரியம், பீ.எப்.சப்ரா ஆகிய 05 மாணவிகளே இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.


இதற்காக உழைத்த ஆசிரியை ஆர்.றாயிஷா மற்றும் பணிப்பாளர் எம்.றியாஸ் முஹமட் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான் கான் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال