JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கரம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து பெண் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சி யாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்  - எம்.முஸ்பீக் )

கற்பிட்டி தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது  பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்த  சம்பவம் நேற்று இரவு  கரம்பைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


 தாய் மோட்டார் சைக்கிலிருந்து வீழ்ந்தை அறியாத மகன் சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் வீழ்ந்ததை  உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.


தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் வயது 49 எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال