JobVibe.lk - Sri Lanka Job Portal

பணி நிறைவு பாராட்டு விழா.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் திறந்த பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும், புத்தளம்  வலயக் கல்வி பணிமனையின் பாட இணைப்பாளருமான வீ. அருணாகரனின் பணி நிறைவு பாராட்டு விழா அண்மையில் (25) புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது .


இப்பணி நிறைவு பாராட்டு விழாவில் புத்தளம் திறந்த பல்கலைகழகத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.எம். ஜிப்ரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் பயிற்சி நிலைய முகாமையாளர் எம்.எச்.எம்.நவாஸ் உள்ளிட்ட  விரிவுரையாளர்கள் மற்றும் மாணவப் பட்டதாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் பாட இணைப்பாளருமான  வீ.அருணாகரனுக்கு இளங்கலைப் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال